வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (13:51 IST)

கரூர் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாறும் குளித்தலை மருத்துவமனை

குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியளித்தார்



கரூர் மாவட்டத்தில், உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் அரவக்குறிச்சி தற்போது கட்சி தாவல் வழக்கில் காலியாக உள்ளது. மற்ற மூன்று தொகுதிகளில் இரண்டு அ.தி.மு.க வும், குளித்தலை தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான ராமர் இருந்து வருகின்றார். இந்நிலையில். பல்வேறு நலத்திட்டங்களை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அவரது தொகுதிக்கு வாங்கி செய்யாத நிலையில், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர். இன்று ஒருநாளில் மட்டும் 8 திட்டங்களுக்கான பூமி பூஜை, குடிநீர் இணைப்பு, நுண் உரங்கள் கட்டிட திறப்பு விழாக்கள் என்று சுமார் ஆயிரத்து 491 லட்சம் மதிப்பீட்டில் அதிரடி நடவடிக்கையாக தீவிர பணியில் களம் இறங்கினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் சாலை மேம்பாட்டு பணிகள் , நகர் நல மைய கூடுதல் கட்டடம் திறந்து வைத்தல் , புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல் , பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் என மொத்தம் ரூ.1491.74 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நேரடி கடனாக ரூ.17.91 லட்சம் வழங்குதல் என பல்வேறு திட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பூமி பூஜைகளுக்கான அடிக்கல்நாட்டு வைத்தும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 
கரூர் மாவட்டத்தில் மருத்துவகல்லுரி 277 கோடி மதீப்பீட்டில் 800 படுக்கைகள் 150 மாணவர்கள் பயிலும் வகையில் மிகப்பெரிய மருத்துவமனையை உருவாக்கி உள்ளதாகவும், மாவட்டத்திலேயே குளித்தலை அரசு மருத்துவமனையை அறிவிக்கப்படுவதாக மாண்பமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அதிநவீன கருவிகளை கொண்டு நோயாளிகளுக்கு பயன்பெரும் வகையில் குளித்தலையில் அமைக்கப்படுவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


சி.ஆனந்தகுமார்