வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:22 IST)

பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

rapido
ரேபிடோ பைக் சேவை தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகிறது என்பதும் குறைந்த கட்டணத்தில் பைக்கில் பயணிகள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 
 
சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை இன்று தொடங்கியது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து இந்த சேவையை தொடக்கி வைத்தார். 
 
முதல் கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசு தோட்டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் ரேபிடோ பைக் சேவை தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் இனி பெண்கள் ரேபிடோ பைக் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Mahendran