1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (12:25 IST)

ரூ.400 கோடி செலவில் பொழுது போக்கு பூங்கா.. சென்னை மக்களுக்கு கொண்டாட்டம் தான்..!

சென்னையில் ஏற்கனவே ஒரு சில தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் இருக்கும் நிலையில் அரசே பொழுது போக்கு பூங்கா ஒன்றை கட்ட முடிவு செய்து நாட்களுக்கு முன்னால் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் ஒண்டர்லா என்ற  பொழுதுபோக்கு பூங்கா சென்னைக்கு மிக அருகில் அதாவது திருப்போரூரை அடுத்த இள்ளளூர் என்ற பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 
 
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து இன்று இந்த பூங்காவிற்கான பூமி பூஜை நடைபெற்றது. 
 
கொச்சி பெங்களூர் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே ஒண்டர்லா பூங்காக்கள் இயங்கி வரும் நிலையில் ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய பொழுது பூங்கா வர உள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva