1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Groom Death

ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புதுமாப்பிள்ளை பலி

ரயில் ண்டவாளத்தைக் கடக்க முயன்ற புதுமாப்பிள்ளை பலி

புதுமாப்பிள்ளை பலி
ஈரோடு அருகே, ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பலரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

 
ஈரோடு ரயில் நிலையத்துக்கும், காவிரி ரயில் நிலையத்துக்கும் இடையே இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பலியானார்.
 
இந்த தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 
 
அப்போது, ஈரோடு முனிசிபல் காலனியைச் சேர்ந்த சேர்மன் மகன் செல்வகணபதி (22) என்றும், அவர் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்தது வந்ததும், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பலியானதும் தெரிய வந்தது.
 
செல்வகணபதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான்  திருமணம் நடைபெற்றதுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
"பாலியல் வழக்கில்" சிக்கிய தாசில்தார் தலைமறைவு