1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. new effort on premalatha vijayakanth

மாவட்டச் செயலாளர்கள் மனைவிகளை வளைத்த பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் மனைவிகளை தனது அன்பு பிடிக்குள் கொண்டுவந்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
 

 
நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. 
 
குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் வாங்காமுடியாமல் போனது. இந்த நிலைக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா தான் காரணம் என கூறி, தேமுதிக நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிக்கு தாவினர்.
 
இவர்களை தடுக்கும் வகையில், அவர்களின் மனைவிகளுக்குப் போன் போட்டு தேமுதிக கட்சி நம்ம கட்சி, அதை நீங்களும், நானும் தான் பலப்படு்த வேண்டும். எனவே, உங்க கணர்கிட்ட நீங்க தான் பக்குவமாக எடுத்துச் சொல்லணும் என்று சென்டிமெண்டாக சொல்லி டச் செய்து வருகிறாராம் பிரேமலா விஜயகாந்த். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம். இந்த தகவல் அறிந்த விஜயகாந்த் மிகவும் குஷியில் உள்ளாராம். 
 
அடுத்த கட்டுரையில்
தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்