திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (12:51 IST)

புதிய கல்வி கொள்கைக்கு பதில் தமிழ்நாடு கல்வி கொள்கை: பொன்முடி

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்த நிலையில் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு அரசு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் அதற்காக குழு அமைக்க திட்டமிடப்பட்டு கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
புதிய கல்விக்கொள்கையில் உள்ள சிறந்த அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தேவையான கல்வியை அமைப்பதற்கு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்ற அமைச்சரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது