1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 மே 2020 (14:17 IST)

தமிழகத்தை மிரட்ட வருகிறான் ஆம்பன்!? – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தை மிரட்ட வருகிறான் ஆம்பன்!? – வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமான் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் தீவு பகுதியருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் பல இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றால் அதற்கு “ஆம்பன்” என பெயரிடப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பொருளாதாரரீதியாக மக்கள் இழப்பை சந்தித்துள்ள நிலையில் ஆம்பன் உருவாகிவிட கூடாது என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.