வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:53 IST)

வள்ளுவர் குறித்து டுவீட்: வைரமுத்துவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

வள்ளுவர் குறித்து வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்விட்டிற்கு நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். வள்ளுவர் குறித்து வைரமுத்துவின் டுவிட் இதோ: 
 
உலகப் பொதுமறை திருக்குறள்;
உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர். 
அவருக்கு 
வர்ண அடையாளம் பூசுவது
தமிழ் இனத்தின் முகத்தில்
தார் அடிப்பது போன்றது.
 
ஏற்றுக்கொள்ள முடியாது.
திருத்துங்கள்; இல்லையேல் 
திருத்துவோம்.
 
வைரமுத்துவின் இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்கள் அதன் கீழே பதிவு செய்த கமெண்ட்ஸ்களில் கூறியிருப்பதாவது: 
 
உலகப்பொதுமறையானை வேண்டுமென்றே அவன் இந்து அடையாளத்தை மறைத்து,, திருநீறை அழித்து கழுத்தில் உத்திராட்ச மாலை களைந்து அவனைநாத்திகனாக சித்தரித்தது யார் முதலில். நாத்திகனாக சித்தரிக்கும் போது ஆத்திக இந்து அடையாளங்களை சித்தரிப்பது எப்படி தவறாகும். திருந்த வேண்டியது நீரே
 
முதல் குறளில் வரும் ஆதி பகவன் என்றச் சொல்
ஆதி நாதர் - சமணர்கள்
ஆதி சிவன் - சைவர்கள்
சூரிய பேரைடையில் சூரியனை மையமாக வைத்தே அனைத்து பேரண்டம் இயங்குவதாலும், இயற்கையை நாம் வணங்குவதாலும் ஆதி பகவன் என்பது சூரியனைக் குறிக்கிறது என்பார்கள்.
 
திருவள்ளுவரை எப்படி இருந்தாலும் எத்துகொள்ளும் பக்குவம் உங்களிடம் இல்லை. உண்மையான திருவள்ளுவர் உருவத்தை ஏன் மாற்றம் செய்து ஏற்று கொள்ளணும். அவர் காவி உடையில் இருப்பது ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு மத நம்பிக்கையை இழிவு செய்யாதீர்கள்
 
உலக பொதுமறை தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை... ஆனால் அதை இயற்றியவர் இந்து மத நம்பிக்கை கொண்டவர்... இதை மறுக்க முடியாது... இல்லையேல் திருத்துவோம்?  முதலில் தாங்கள் திருந்தவும்..
 
வைரமுத்துவின் டுவிட்டிற்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது