நெல்லை டவுணில் கோயில் தகராறில் இரட்டைக் கொலை.. சகோதரர்கள் வெட்டிக் கொலை
நெல்லை டவுண் மணிபுரம் பகுதியில் கோயில் தொடர்பான தகராறில் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிபுரம் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோயில் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகோதரர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலைக்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சகோதரர்களை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் மணிபுரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

