இனி ஹெட்போனை காதில் மாட்ட வேண்டாம்.. கண்ணாடி அணிந்தால் போதும்.. Nothing புதிய அறிமுகம்...
பயனர்களுக்கு சிறந்த கேட்கும் அனுபவத்தை வழங்கும் வகையில், பிரசித்தி பெற்ற Nothing நிறுவனம் தனது புதிய ‘ஹெட்போன் (1) புரோ’ என்ற பிரீமியம் ஓவர்-இயர் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கண்ணாடியும் டைட்டானியமும் இணைந்த இதன் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தொழில்நுட்ப விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த ஹெட்போனின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று டிரைவர்கள் கொண்ட ட்ரிபிள்-டிரைவர் அமைப்பும் , 10 மைக்ரோஃபோன்கள் கொண்ட 46dB வரை சத்தத்தை தடுக்கும் ‘ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்’ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்போன் பயன்பாட்டைப் பொறுத்து லைவ் ஹவுஸ், கிளப், கான்சர்ட் ஹால் போன்ற பல ஒலி முறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் 1,060 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகும். நாய்ஸ் கேன்சலேஷன் வசதி இயங்கும்போது 30 மணி நேரமும், அது இல்லாதபோது தொடர்ந்து 68 மணி நேரமும் பேட்டரி லைஃப் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங், IP52 வாட்டர் ரெசிஸ்டன்ஸ், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் சாதனங்களுக்கான வேகமான இணைப்பியல் போன்ற கூடுதல் வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 327 கிராம் எடையில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த ஹெட்போன் கிடைக்கிறது.

