1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:27 IST)

வீடு புகுந்து கொள்ளையடித்த ஏட்டு: வேலியே பயிரை மேய்ந்ததால் அதிர்ச்சி

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது  செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட் ஏட்டுவிடம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு காவல்துறை பணிக்கு தேர்வானார். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார். இதனையடுத்து இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது
 
இந்த நிலையில் நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளையின்போது கைரேகையில் சிக்கினார் ஏட்டு கற்குவேல். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.