செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (14:16 IST)

சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது.. மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், வீரலட்சுமி ஆகிய இருவர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர்.
 
இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா். இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் அதேபோல் அவர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவதை பார்க்கும் போது அவர் இப்போதைக்கு வெளியே வர முடியாது என்று தெரிகிறது. 
 
Edited by Mahendran