1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (22:08 IST)

தாய்லாந்து குகை சிறுவர்களை மீட்ட கடற்படை வீரர் பலி - விரிவான தகவல்கள்

2018ஆம் ஆண்டு தாய்லாந்து குகையில் சிக்கிக்கொண்ட 13 பேரைக் காப்பாற்றிய மீட்புக்குழுவைச் சேர்ந்த ஒருவர் மீட்புப்பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தொற்றுநோயால் இன்று உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தாய்லாந்து கடற்படையை சேர்ந்தவர் பீரட் பக்பரா. இவர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
 
மருத்துவச் சிகிச்சையில் வைத்திருக்கப்பட்ட பீரட் வெள்ளிக்கிழமை அன்று உடல் நலம் குன்றி உயிரிழந்தார்..
 
பிறகு இஸ்லாமிய முறையில் அவரின் உடல் அவரின் சொந்த ஊரான தாய்லாந்தில் தெற்கு மாகாணம் சட்டனில் புதைக்கப்பட்டது.
 
2018 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று 11 வயதிலிருந்து 16 வயதுவரை உள்ள ஒரே அணியை சேர்ந்த 12 கால்பந்து வீரர்களும் அவர்களது 25 வயது பயிற்சியாளரும் தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த தாம் லுவாங் என்ற குகையில் மாட்டிக்கொண்டனர்.
 
குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.
 
குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது.
 
அப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது.
 
ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர்.
 
அப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது.
 
ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர்.
 
தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.
 
இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது.
 
அதன் பிறகு, ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.
 
17 நாட்களுக்கு பிறகு குகைக்குள் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்டுபட்டு சியாங் ராய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த குகை 2019 நவம்பர் மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.