பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாஷ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் கூறியதாவது:
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அம்படுத்தாதது. வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு ஒய்ரச்சனைகளை முன்னிறுத்தி பிப்ரவரி 16 ஆம் தேதி விவசாயிகள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.