1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

ஜனவரி 26-ல் பஞ்சாப் முதல்வர் கொல்லப்படுவார்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்..!

ஜனவரி 26 ஆம் தேதி பஞ்சாப் முதல்வர் கொல்லப்படுவார் என காலிஸ்தான் பயங்கரவாதி பகிரங்கமாக மிரட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக இருக்கும் பஞ்சாபில் தங்களுக்கு தனிநாடு வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராடி வருகின்றனர்

ஆனால் இந்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் இந்தியாவுக்கு எதிராக சில வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து தனிநாடு கோரிக்கையில் உறுதியாக இருக்கும் காலிஸ்தான் இந்தியாவுக்கு சில மிரட்டல்களை விடுத்து வருகிறது.


இந்த நிலையில் ஜனவரி 26 குடியரசு தின விழாவின் போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கொலை செய்யப்படுவார் என்றும் அதேபோல் பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கொலை செய்யப்படுவார் என்றும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வாந்த் சிங் பன் மிரட்டல் விடுத்துள்ளார்.  

இந்த மிரட்டலை அடுத்து குடியரசு தின விழாவின் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது

Edited by Siva