வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (14:08 IST)

பஞ்சாபில் வீசப்பட்ட இளம் பெண்ணின் உடல் ஹரியானாவில் கண்டுபிடிப்பு: 5 பேர் கைது..!

பஞ்சாபில் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட இளம் பெண்ணின் உடல் ஹரியானா மாநிலத்தில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாடல் அழகி திவ்யா. இவர் அபிஜித் என்பவரை காதலித்திருந்தார் என்றும் இருவரும் ஹோட்டலில் தனியாக இருந்துள்ளார் என்றும் தெரிகிறது

இந்த நிலையில் திவ்யா, அபிஜித் உடன்  தனிமையில் இருக்கும் போது வீடியோ எடுத்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து இருவருக்கும் சண்டை வந்த நிலையில் திவ்யாவை கொலை செய்துவிட்டு அதன் பிறகு நண்பர்களின் உதவியோடு பிணத்தை பஞ்சாபில் உள்ள கால்வாயில் வீசி உள்ளார்

அந்த பிணம் கால்வாய் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு வந்தபோது கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது அபிஜித் உட்பட அவரது நண்பர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை முடிவு வந்ததும் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran