புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (23:26 IST)

தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: 16 தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவர்கள்

Kaur
தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் 16 தங்கப்பதக்கங்கள் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் கரூர் வீரர், வீராங்கனைகள் 32 பதக்கங்கள் பெற்று வெற்றி – ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், ரோஜாக்கள் கைகளில் கொடுத்தும், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்.
 
கரூர் அடுத்துள்ள சின்ன கோதூரில் அமைந்துள்ள பிரதர்ஸ் ஸ்பீட் ஸ்கேட்டிங் அகாடமி செயல்பட்டு வருகின்றது,. இதே பகுதியினை சரவணன் மற்றும் கலையரசி ஆகியோரின் தம்பதியினரின் முயற்சியாலும், இத்தம்பதியினரின் மூத்த மகன் லட்சுமி தீபக் (வயது 18) நரேந்திர பிரசாத் (வயது 15) ஆகிய இருவரும் கோச்சிங் மாஸ்டராகவும், பயிற்றுநர்களாகவும் இந்த அகாடமியினை சுமார் 7 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் ஆயிரக்கணக்கானோர் வருடம் முழுவதும் பயிற்சி பெற்று வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வரும் நிலையில், இங்குள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியன் ஆப் கரூர் அமைப்பின் மூலம் 14 வீரர், வீராங்கனைகள் கடந்த 28 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளில் தேசிய அளவில் நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் இந்தியா (SSFI) என்கின்ற அமைப்பு சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள NIT இன்டர்நேஷனல் ஸ்கேட்டிங் ரிங்கில் நடைபெற்றது. இதில், 22 வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2023 நடைபெற்ற விளையாட்டில் கரூரிலிருந்து கலந்து கொண்டவர்கள் 16 தங்கப்பதக்கங்களும், 12 வெள்ளிப்பதக்கங்களும், 4 வெண்கலப்பதக்கங்களும் மொத்தம் 32 பதக்கங்கள் பெற்று தேசிய அளவில் சாதனை பெற்றனர். இந்த சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் தொடர்வண்டி மற்றும் பேருந்துகள் மூலம் பயணம் செய்து கரூர் வந்தனர். இவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பிலும், ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியன் ஆப் கரூர் சார்பிலும் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், மாலை நேரத்தில் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, ஸ்பீட் ஸ்கேட்டிங் அகாடமிக்கு வந்தனர். அவர்களுக்கு பட்டாசு வெடித்தும், ரேஜாக்கள் கொடுத்தும் மலர் மாலைகளும், பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும், ஸ்போர்ட்ஸ் கிரவுண்டில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பும் மீண்டும் அளிக்கப்பட்டதோடு, ஸ்கேட்டிங் ஆடி வந்த மற்ற வீரர்கள் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரேஜாக்களை ஸ்கேட்டிங் ஆடி கொடுத்து மகிழ்வித்தனர்.
 
பேட்டி : 1) லட்சுமி தீபக் – விளையாட்டு வீரர் மற்றும் கோச்சிங் மாஸ்டர்
 2) மகேஸ்வரி – உதவி முதல்வர் – கரூர் தனியார் பள்ளி
3) கே.பி.சுப்பிரமணியன் – கல்வியாளர் – கரூர் மற்றும் ஊர் பொதுமக்கள்