ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (23:04 IST)

நேஷனல் பாக்சிங் சாம்பியன்ஷிப் 2022 போட்டி: 9 நபர்கள் வெற்றி

karur
கரூரில் இயங்கி வரும் ஹரிஷ் ஸ்போர்ட்ஸ் அகடாமி மற்றும் டைசன் ஸ்போர்ட்ஸ் அகடாமி-  பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதலில் மாநில அளவில் 10 பேர் கொண்ட பாக்சிங் போட்டியில் கலந்து கொண்டு 9 நபர்கள் வெற்றி பெற்று தங்கத்தை வென்றெடுத்து தேசிய அளவில் விளையாட தகுதி பெற்றனர்.
 
தேசிய அளவில் கலந்துகொண்ட ஒன்பது பேரில் ஏழு நபர்கள்  தங்கத்தை வென்றெடுத்தார்கள்.
 
இப்பொழுது அந்த ஏழு நபர்களும் அகில உலக குத்துச்சண்டை போட்டியில் விளையாட தகுதி பெற்று உள்ளனர்.
 
இந்நிலையில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் அண்ணன் திரு  #VV_செந்தில்நாதன் அவர்கள் இந்த அக்டாமிகளுக்கு ஸ்பான்சராக இருந்து வருவதால் தங்கத்தை வென்றெடுத்த தங்க மகன்களும் தங்க மகள்களும் மரியாதை நிமித்தமாக தலைவர் #VV_செந்தில்நாதன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்று சென்றனர்.

Edited by Sinoj