1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:31 IST)

மருத்துவ படிப்புகளுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு: தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு  நடத்தப்பட இருக்கும் நிலையில் இது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது

எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு தேர்வு முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தகுதி தேர்வு ஆகிய தேர்வுகளை ஒன்றாக இணைத்து நெக்ஸ்ட் எனப்படும் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.

மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்பிபிஎஸ் படிப்பில் நான்கரை ஆண்டுகள் படிப்பு முடிந்த பின்னர் நெக்ஸ்ட் நிலை தேர்வு எழுத வேண்டும் என்றும் அப்போதுதான் ஒரு ஆண்டு மருத்துவராக பணியாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என தேசிய மருத்துவர் ஆணையம் தெரிவித்துள்ளது.  மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தை கைவிட கோரி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வரும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்

இந்த நிலையில் நெக்ஸ்ட் தேர்வு அமல்படுத்துவதில் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva