நத்தம் விஸ்வதானுக்கு "கல்தா"
நத்தம் விஸ்வதானுக்கு "கல்தா"
திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், திண்டுக்கல் மேயர் மருதராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நத்தம் தொகுதியில் இருந்து ஆத்தூர் தொகுதிக்கு மாற்றி போட்டியிட்டதால் நத்தம் விஸ்வநாதன் தோல்வி அடைந்தார். மேலும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால், அதிமுகவில் இருந்து நத்தம் விஸ்வநதான் ஓரம் கட்டப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.