1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:07 IST)

நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் மோதி ஒருவர் பலி!

கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி பின்புறம் அமர்ந்தவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். 
 
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று காலை 10 மணி அளவில்  சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் 51 அதேபோல ஓலம்பஸ்  பகுதியைச் சேர்ந்த வினோத் வயது 32 இவர்கள் இருவரும் fz யமஹா நஞ்சுண்டாபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சவுரிபாளையம் பகுதி  சேர்ந்த சரவணகுமார்  தூக்கி வீசப்பட்டார்  இதில் சம்பவ இடத்திலே அவர் பலியானார் தற்போது தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.