செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (19:48 IST)

விஜய் வீதிக்கு வந்தால் பலருக்கு பீதி உருவாகும்: நாஞ்சில் சம்பத்

சமீபத்தில் நடந்த சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒருசில அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் களத்தில் இருந்தாலும் விஜய்யின் பேச்சினால் ஏற்பட்ட தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் களத்தில் இறங்கினால் அது பலருக்கு பீதியை உருவாக்கும் என நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனால் களத்தில் இறங்கி சமாளிக்க முடியவில்லை என்றும், ரஜினிகாந்த் களத்தில் இறங்கவே யோசிக்கின்றார் என்றும் கூறிய நாஞ்சில் சம்பத், விஜய் கூறிய கருத்துக்களால் இளைஞர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளதாக கூறினார்.

விஜய்க்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவதாக கூறிய நாஞ்சில் சம்பத், அவர் தனது ரசிகர்களை எப்படி பயன்படுத்தபோகிறார் என்பதை பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்டம் தீர்மானிக்கப்படும் என்றும், விஜய் அரசியலில் வீதிக்கு வந்தா பலருக்கு பீதி உருவாக்கும் என்றும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்,.