வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (11:20 IST)

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன?

சென்னை நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படும் என தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அரசு ஆணையில் கூறியிருப்பதாவது
 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் கடந்த ஜுன் மாதம் அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், தற்போது நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என அழைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தை ஓ.டி.ஏ. மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்வதற்காக இதை முன்வைக்க வேண்டும் என குறிப்பிடப்பிட்டிருந்தார்.
 
இந்த பெயர் மாற்றம் தொடர்பான வேண்டுகோளை கடந்த மே மாதம் தென்பிராந்திய ராணுவ தளபதியும் கொடுத்திருந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜுலை மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை ஓ.டி.ஏ. மெட்ரோ ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்தது.
 
இதை ஏற்று நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தை ஓ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கி ஆணையிட்டுள்ளது. 
 
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran