டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! எவ்வளவு கிடைக்கும்?
டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு குரூப் 'சி' மற்றும் குரூப் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். இதனால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக குறைந்தது ரூ. 16,800 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டும் தீபாவளி போனஸாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அதே தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva