1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கன்னியாகுமரி , திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:48 IST)

கேரளாவில் இருந்து குமரிக்கு கொண்டு வந்த கோழி கழிவுகள் தடுத்து நிறுத்திய-நாம் தமிழர் மற்றும் தமுமுக.கட்சியினர்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிமம் தினம் குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கும், திருவனந்தபுரம் விழிஞ்சம்  அதானி யின் துறைமுக படிக்கும் 100-க்கும் அதிகமான லாரிகளில் தினம் கொண்டு செல்வது ஒரு தொடர் நிகழ்வுகள். 
 
இந்த நிலையில் கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கோழி,மருத்துவ கழிவுகளை லாரிகளில் எடுத்து வந்து குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பாடு, மற்றும் விவசாயத்திற்கு பயன் படும் குளங்களில் நடு இரவு நேரத்தில் தட்டிவிட்டுச் செல்வது அவ்வப்போது நிகழும் நிலையை தடுக்க முடியாத நிலையில்.
 
தன்னார்வ அமைப்பினர், அரசியல் கட்சியினர் இத்தகைய கோழி கழிவுகளை கொண்டு வரும் லாரிகளை பிடித்து காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்வது, அபராதம் வசூலித்து விட்டு திரும்பி அனுப்புவது ஒரு தொடர்கதையாக நிகழ்கிறது.
 
கடந்த (ஏப்ரல்-28)-ம் தேதி நள்ளிரவில் கேரள பதிவு எண் லாரி  குமரி மாவட்ட பகுதியான அழகிய மண்டபத்தை கடந்து சென்ற போது துர் நாற்றம் பரவ இதனை பார்த்த பொது மக்கள் அந்த பகுதியில் உள்ள நாம் தமிழர் மற்றும் தமுமுக  கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
தகவல் அறிந்த கட்சியினர்  நள்ளிரவு 
இரண்டு கட்சியினரும் வேகமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வாகனத்தை  தடுத்து நிறுத்தி  தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.