1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (16:41 IST)

என் அப்பாவின் கனவை செஞ்சு காட்டலைன்னா.. நான் வீரப்பனுக்கு பொறக்கல..! – சவால் விட்ட வித்யா வீரப்பன்!

Vidhya Veerappan
மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் வித்யா வீரப்பன் மக்களிடையே உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.



மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியும் ‘மைக்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதியில் வித்யா வீரப்பன் போட்டியிடுகிறார். இவர் சந்தனக்கடத்தில் வீரப்பனின் மகள் ஆவார். முன்னதாக பாஜகவில் இணைந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் மேற்கொண்ட வித்யா வீரப்பன் “என் அப்பா ஏழை மக்கள் நன்றாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டார். தினசரி குழந்தைகள் படிப்பு செலவு, மருந்து செலவு என ஒவ்வொன்றுக்கும் காலம் முழுவதும் நாம் அல்லாடிக் கொண்டிருக்க வேண்டுமா. நான் இந்த தொகுதி எம்.பி ஆகும்போது ஒரு தொகுதியை எப்படியெல்லாம் முன்னேற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த தொகுதியை மாற்றிக் காட்டுவேன். என் அப்பாவின் கனவு இது. உங்களிடம் சவாலாக இதை சொல்கிறேன். இதை நான் செய்து காட்டாவிட்டால் நான் வீரப்பனுக்கு பிறந்த மகள் இல்லை” என சவால்விட்டு பேசியுள்ளார்.


கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், அதிமுகவிலிருந்து ஜெயப்பிரகாஷ், பாஜகவிலிருந்து நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருந்தாலும் நாதக வேட்பாளர் வித்யா வீரப்பனுக்கு ஆதரவாக அங்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K