பிரணாப் முகர்ஜி மறைவு ...7 நாட்கள் அரசுமுறை துக்கமாக அனுசரிப்ப்பு ! மத்திய அரசு
கொரோனா தொற்றால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரபல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அவருக்கு வயது 84 ஆகும்.
இந்நிலையில் ரணாப் முகர்ஜி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்
-
என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் ஹெச்.ராஜா, மிகச்சிறந்த தேசியவாதியும் மத்திய அமைச்சர் மற்றும் ஜனாதிபதியாக பாரத நாட்டை வழிநடத்திய திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். #PranabMukherjee எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதை அடுத்து, இன்று முதல் வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை 7 நாட்கள் நாடு முழுவதும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.