1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (12:58 IST)

நான் இன்னும் சாகல.. ஜன்னல் கடை உரிமையாளர்!

ஜன்னல் கடை உரிமையாளர் நான் நலமாக தான் உள்ளேன் என தெரிவித்துள்ளார். 
 
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் பிரபலமானது ஜன்னல் கடை. இதன் உரிமையாளர், தொற்றுக்கு பலியானதாக, பல்வேறு ஊடகங்களிலும் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தான் மரணிக்கவில்லை என  ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கூறியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, நான் நலமாக உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த, என் சகோதரரின் மரணம், எங்கள் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், இதில் இருந்து மீண்டு, ஒரு மாதத்திற்கு பின், கடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.