தமிழகத்தில்’ வேலை வாய்ப்பு ’கொலை செய்யப்பட்டுள்ளது - வேல்முருகன்

velmurukan
Last Modified சனி, 23 பிப்ரவரி 2019 (13:13 IST)
தமிழ்நாட்டில்  சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதை கண்டித்து வரும் 28 ஆம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:
 
வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்து குவிந்து உள்ளோர் 1.5 கோடி பேர் ஆவர். தமிழகத்தில் உள்ள ஒட்டுவொத்த வர்த்தகத்தையும் கைப்பற்றியுள்ளனர். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 99 % பேர் வடமாநிலத்தவர்கள்.

இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு கொலை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வரும் 28 ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருக்கிறோம்.

 
மேலும் பிற மாநிலங்களில் மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை தான்  பணியில் நியமிக்க வேண்டுமெனெ சட்டம் உள்ளது. தமிழ்நாட்டிலும் அதே சட்டம் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :