திங்கள், 12 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (13:52 IST)

மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன்

Mutharasan
மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
பிரதமர் மோடி நடிப்பதை பார்த்து, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய பட்டங்களை மோடியிடம் திரும்ப கொடுத்திருப்பார் என்று கூறிய முத்தரசன் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டு இரண்டு முறை மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது என்று கூறினார் 
 
ரூபாய் 15 லட்சம் தருவேன் என்று மோடி சொன்னதை நம்பி வங்கி கணக்கு திறந்த மக்களுக்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நாள் ஆகஸ்ட் 9 என்றும் அப்படிப்பட்ட நாளை மோடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்
 
சிவப்பும் நீலமும் கலந்து மக்கள் நலனுக்காக போராடும் என்றும் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்