மேலும் இரு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழர்கள் இல்லையா? கொந்தளிப்பில் தமிழக மக்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை தமிழக ஆளுனர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் காரணத்தால் தமிழகத்தில் ஒருவித அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இதே தமிழக ஆளுனர் ஏற்கனவே வேறு இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் தமிழர் அல்லாதவர்களை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளாவை சேர்ந்த பிரமீளா என்பவரையும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாத்திரியை நியமனம செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், 'இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா நியமிக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் பிரமிளா தந்தை தமிழர் என்றும் அவரது தாய் மட்டுமே கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்,. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள நெட்டிசன்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்,.