மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....
கள்ளக்காதல் என்பது உலகம் முழுவதும் இருக்கிறது. மனைவியை பிடிக்காத கணவன் வேறொரு பெண்ணுடனும், கணவனை பிடிக்காத மனைவி வேறொரு ஆணுடனும் கள்ளக்காதல்களில் ஈடுபடுகிறார்கள். இது குடும்பத்தில் பெரிய பிரச்சினையாக வெடித்து குடும்ப நிம்மதியை கெடுக்கிறது. பலரும் விவாகரத்தும் பெறுகிறார்கள். இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனாலும் கள்ளக்காதல் குறைந்தபாடில்லை. ஒருபக்கம் ஒரு பெண் விருப்பப்பட்டு இன்னொரு ஆணோடு உடலுறவு கொண்டால் அதை கள்ளக்காதல் என சொல்ல முடியாது.. அதை குற்றம் என சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றம் ஒரு முறை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் நாட்டில் கள்ளக்காதல் அதிகரித்து விட்டது. ஒருபக்கம் தனது மனைவி இன்னொருவருடன் கள்ளக்காதலில் ஈடுபடுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை கொலை செய்யும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் வைத்திருக்கிறார்.
இதை பார்த்து உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசார் பாலமுருகனை தற்போது கைது செய்திருக்கிறார்கள். கள்ளக்காதல் தொடர்பாக பாலமுருகன் பல நாட்களாகவே மனைவியை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை விடவில்லை என்பதால் ஆத்திரத்தில் பாலமுருகன் இதை செய்ததாக தெரிகிறது.