வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (21:07 IST)

தமிழக முதல்வரிடம் பேசியது என்ன? முரளிதர்ராவ் பேட்டி

தமிழக முதல்வரிடம் பேசியது என்ன? முரளிதர்ராவ்
சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை வண்ணாரப்பேட்டையிலும் சிஏஏ போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தீவிர முயற்சி செய்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
 
இந்த நிலையில் திடீரென தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடன் சிஐஏ போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்
 
இவர்கள் இருவரும் அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தி வரும் அதே நேரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் சென்னைக்கு வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆலோசனை நடத்தினார் சென்னை டெல்லி ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் முதல்வரிடம் பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முரளிதரராவ் ’குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை குறித்து முதல்வரிடம் பேசியதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவரிடம் விவாதித்தோம் என்றும் தெரிவித்தார்