செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (13:58 IST)

பெரிய பாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்....

தமிழக காவல்துறை அதிகாரி பெரிய பாண்டியின் மனைவியிடம், ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கிய முனிசேகர் அவரின் மன்னிப்பு கேட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்ட சமபவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
கொள்ளையர்களிடமிருந்து அவரை காப்பற்ற தனிப்படை சேர்ந்த காவல் அதிகாரி முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது, தவறுதலாக பெரியபாண்டியன் உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

 
இந்நிலையில், கடந்த 24ம் தேதி பெரிய பாண்டியனின் சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகிள் உள்ள மூவிருந்தாளியில் 16ம் நாள் காரியம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முனிசேகர் சென்றார். அப்போது, ராஜஸ்தானில் நடைபெற்ற சம்பவங்களை பெரியபாண்டியன் மனைவி பானுரேகா மற்றும் அவரின் தந்தை ஆகியோரிடம் விளக்கிய முனிசேகர், அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
முனிசேகர் தங்களிடம் மன்னிப்பு கேட்டதாக பானுரேகாவும் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பெரிய பாண்டியனின் மரணத்திற்கு முனிசேகரே காரணம் என செய்தி வெளியானதால், உயர் அதிகாரிகளின் அறிவுரை படியே, முனிசேகர் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.