பேருந்தை மறித்து நடனம்... இளைஞர்களை அடித்து விரட்டிய போலீஸார்
இன்று தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.
இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாதையத்திற்கு வந்த இளைஞர்கள் 50 பேர் பேருந்தை மறிந்து ஆட்டம் போட்டுள்ளனர். மேலும் இன்னொரு பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்,பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்துவிரட்டியதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.