புதன், 21 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:58 IST)

கனவில் தோன்றிய அசரீரி… மருமகளுக்காக உயிரை விட்ட மாமியார்!

மருமகள் உடல்நலம் சீரடைய வேண்டும் என்பதற்காக தீக்குளித்த மாமியாரால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மனைவி அன்னம். இவர்களுடைய மகன் கண்ணனுக்கு தனது சொந்த அண்ணன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். சொந்த அண்ணன் மகளே மருமகள் என்பதால் அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மருமகளுக்கு சமீபத்தில் அதிக உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதால் கவலையுடன் இருந்துள்ளார். இதனிடையே அவரது கனவில் அசரீரி தோன்றி தான் உயிரிழந்தால் மட்டுமே மருமகள் உடல்நிலை சரியாகும் என கூறியுள்ளது.

இதனால் அன்னம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Edited By: Sugapriya Prakash