திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (21:27 IST)

திருமணம் செய்ய மறுத்த காதலன்… பிரபல நடிகை தற்கொலை

கர்நாடக மாநிலம்  பெங்களூரில் வசித்து வந்தவர் சந்தனா (29). இவர் சின்னத்திரை நடிகையாக பிரபலம் ஆனவர். இவர் சில விளம்பரங்களிலும் தொலைக்காட்சி தொடர்களில்  நடித்துள்ளார்.

இவருக்கும்  தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களில் ஜோடியாக சுற்றியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தனது வீட்டில் இருந்த போது சந்தனா விசம் குடித்து தற்கொலை  முயற்சி மேற்கொண்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தனா தனது செல்போனில் தன் சாவுக்கு காதலன் தினேஷ் என்று பேசிய ஒடு வீடியோ கிடைத்துள்ளது. அதில், தினேஷ் ரூ. 5லட்ச  பணம் வாங்கியதுடன், அவரை திருமணம் செய்து மாட்டேன் என கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.