சென்னை விமான நிலைய கழிவறையில் கிலோ கணக்கில் தங்கம்.. சுங்க இலாகா அதிகாரிகள் அதிர்ச்சி..!
சென்னை விமான நிலைய கழிவறைவில் கிலோ கணக்கில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சுங்க இலாக அதிகாரிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்,
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 85 லட்சம் மதிப்புள்ளான 1.25 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வெளியானது. இதனை எடுத்து உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக கழிவறையில் போட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கழிவறைக்கு வந்தது யார்? திரும்பி சென்றது யார் ?என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Mahendran