1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:07 IST)

பறவை காய்ச்சல் பீதி - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!

தமிழ்நாட்டுக்குள் பறவை காய்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லை பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்துப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள வாத்து பண்ணை ஒன்றில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் சமீபத்தில் பறவை காய்ச்சலால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து ஆலப்புழாவில் தொடர்ந்து பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருவதால் பண்ணைகளில் உள்ள 20,000 வாத்துகளையும், 35,000 கோழிகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கேரளா முழுவதும் வாத்து, கோழி மற்றும் காடை ஆகியவற்றின் இறைச்சியை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கேராவில் இருந்து  தமிழ்நாட்டுக்குள் பறவை காய்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லை பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளா - தமிழக எல்லையில் 13 வழித்தடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாலை முதலே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.