வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுவடையும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே புயலாக வலுவடைவதாக செய்திகள் வெளியாகியுள்ளது
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெற்று, நாளை மறுநாள் தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால் கணிப்பிற்கு மாறாக இன்றே இது மோன்தா புயலாக மாற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் மோன்தா வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற்று, அன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K