1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Monsoonfor Tamilnadu will be started in October 26

வருகிறது வடகிழக்கு பருவமழை.. இனிமே மழைதான்! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Tamilnadu
காலதாமதமாகி வந்த வடகிழக்கு பருவமழை அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. எனினும் தமிழகத்தின் அதிகபட்ச நீர் தேவைகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் வடகிழக்கு பருவமழை மூலமாகவே கிடைக்கிறது.

இந்நிலையில் இந்த மாதம் தொடக்கமே தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நாங்கதான் ஒரிஜினல் அதிமுக.. போலிகளை கண்டு ஏமாறாதீர்?! – எடப்பாடியார் காரசார பதில்!