வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (07:24 IST)

பணமிருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலை ஆகும், சிறையும் ரிசார்ட் ஆகும். எச்.ராஜா

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதும், சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து விழா ஒன்றில் பேசிய எச்.ராஜா, 'பணம் இருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலையாகும், சிறைச்சாலையும் ரிசார்ட்டாகும்' என்று கூறியுள்ளார்.



 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிதான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தங்க வைத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கத்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு காங்கிரஸ் அரசுகள் ஆதரவளிக்கின்றன. பணம் இருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலையாகும், சிறைச்சாலையும் ரிசார்ட்டாகும். 
 
தினகரனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நோக்கில் இருக்கின்றார். அ.தி.மு.க-வின் எந்த ஒரு செயலிலும் பா.ஜ.க இல்லை. சசிகலாவின் அதீத அதிகாரப் பசியின் காரணமாகத்தான் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவராக சசிகலா திகழ்கிறார். இவ்வாறு எச்.ராஜா பேசினார்