ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: சனி, 6 டிசம்பர் 2025 (11:48 IST)

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...
திருப்பரங்குன்றத்தில் மலையில் ஓரிடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒருவர் தொடர்ந்த வழக்கில் அந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். எனவே இந்து முன்னணி இயக்கத்தினரும், பாஜகவினரும் அங்கு சென்று தீபம் ஏற்ற முயன்றனர்.

ஆனால் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. எனவே அந்த இடம் போராட்டக் களமாக மாறியது. தற்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருக்கிறது. அவர்கள் தீபம் ஏற்றவேண்டும் என சொல்லும் இடம் இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதிக்கு அருகிலேயே இருக்கிறது. வேண்டுமென்றே மத கலவரத்தை உருவாக்குவதற்காக அங்கு தீபம் ஏற்ற முயற்சி செய்கிறார்கள் என்பது தமிழக அரசின் வாதமாக இருக்கிறது.
 
ஒருபக்கம், இந்து முன்னணி இயக்கம் மற்றும் பாஜகவினர் தீபம் ஏற்ற துடிக்கும் அந்த இடம் அது ஒரு தீபத்தூணே இல்லை. அது ஒரு நிலக்கல். அதாவது எல்லைக்கல். நிலங்களை, சாலைகளை அளப்பது போல மலைகளையும் வெள்ளைக்காரர்கள் அளந்து அந்த இடத்தில் ஒரு எல்லைக்கல்லை நிறுவியிருக்கிறார்கள். அதை தீபத்தூண் என நினைத்து இவர்கள் தீபம் ஏற்ற துடிக்கிறார்கள் என்று உண்மை தெரிந்த பலரும் ஆதாரங்களுடன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 
 
இந்நிலையில், திரௌபதி பட இயகுனர் மோகன் ஜி ‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தடை போட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறோம். இந்துக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? குறிப்பிட்ட பிரிவினரின் ஓட்டுக்காக ஏன் இந்துக்களை வஞ்சிக்கிறாங்க? நீதிபதி அவ்வளவு கண்டிப்பாக உத்தரவு போட்டும் தீபம் ஏற்ற முடியல.. அடுத்த வருடம் தீபம் எற்றுவோம்னு நம்புவோம்’ என கருத்து கூறியிருக்கிறார்.
 
இதைத்தொடர்ந்து ‘உண்மை என்னவென்று தெரியாமல் இப்படி உளரக்கூடாது.. வேண்டுமென்றே அவர்கள் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அந்த இடம் தீபம் ஏற்றும் இடமே அல்ல.. அது எல்லைக் கல்.. வேண்டுமென்றே தமிழகத்தின் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க இப்படி நடந்து கொள்கிறார்கள். இது புரியாமல் நீ உளறிக் கொண்டிருக்கிறாய்’ என்று நெட்டிசன்கள் பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.