தொடர்புடைய செய்திகள்
- வணக்கம் சென்னை.. பாரதி, அவ்வையார் மேற்கோள்! – தமிழில் கலக்கும் பிரதமர் மோடி!
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் பீரங்கி! – நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!
- பிரதமர் துவங்கி வைக்கும் ரயிலை இயக்கும் பெண்! – சுவாரஸ்யமான தகவல்!
- கடற்படை தளத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்! – சென்னை வந்தார் பிரதமர் மோடி!
- பிரதமரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்! – கூட்டணி இறுதியாக வாய்ப்பா?
10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?
10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்தபோது சுமார் எட்டாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் சற்றுமுன் தமிழகத்தில் இருந்து கிளம்பி கேரளா சென்றுள்ளார்
இந்த நிலையில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அரசு விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடமும் பத்து நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்
இந்த ஆலோசனையில் தேர்தல் கூட்டணி குறித்து மூவரும் பேசியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் பாஜக தவிர வேறு எந்தக் கட்சிகளும் உறுதிசெய்யப்படவில்லை.
பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதா? அல்லது அதிமுக பாஜக மட்டும் தனித்து கூட்டணியாக போட்டியிடுவதா என்பது குறித்த ஆலோசனையில் மூவரும் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது
மேலும் மத்திய அரசின் ஒரு சில திட்டங்களை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், அந்தத் திட்டங்களை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பிரதமரிடம் வேண்டுகோள் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
