1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:19 IST)

மோடி என் பழைய காலத்து நண்பர்; நல்ல மனிதர்: டி.ஆர்.பாலு புகழாரம்..!

பிரதமர் மோடி தனது பழைய காலத்து நண்பர் என்றும் நல்ல மனிதர் என்றும் ஆனால் அதே நேரத்தில் நம் மாநிலத்திற்கு தர வேண்டிய பணத்தை தராமல் இருந்தால் அவரிடம் கேட்காமல் இருக்க முடியாது என்றும் திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார். 
 
தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி ஆர் பாலு பேசியபோது ’மோடி தவறு ஏதும் செய்யாதவர் என்றும் அவரை மோசமானது மனிதர் என்று சொல்ல முடியாது என்றும் மோடி என்னுடைய பழைய காலத்து நண்பர் என்றும் கூறினார்.
 
நான் அமைச்சராக இருந்தபோது குஜராத்தில் இருந்த வந்த அவர் ஆயிரக்கணக்கான கோடி திட்டங்களை கையெழுத்து போட்டு வாங்கி சென்று உள்ளார் என்றும் தெரிவித்தார் அவர் எதிர் கட்சி தான் என்றாலும் ஆளுங்கட்சியில் இருந்த நான் அப்போது செய்து கொடுத்தேன் என்றும் இன்றைக்கும் அந்த நன்றியோடு அவர் இருக்கிறார் என்றும் நான் கேட்டதை அவர் இல்லை என்று சொன்னதே இல்லை என்றும் கூறினார் 
 
ஒருநாள் மோடி என்னை டிபன் சாப்பிட வீட்டுக்கு அழைத்தார், அப்பவே என்னுடைய நாடு என குஜராத்தை குறிப்பிட்டார், என்னுடைய நண்பராக மோடி இருப்பது பெருமை குறியது என்று தெரிவித்தார் 
 
ஆனால் அதற்காக என்னுடைய மாநிலத்திற்கு நிதி தராமல் இருப்பதை அவரிடம் எப்படி கேட்காமல் இருக்க முடியும் என்றும் அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தொடர்ந்து தற்போது பொய் சொல்லி வருகிறார் என்றும் டி ஆர் பாலு தெரிவித்தார்.
 
Edited by Mahendran