வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (14:24 IST)

பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம்.! ஓரிரு நாட்களில் தேதி அறிவிப்பு..!

modi
பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக  பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த கூட்டத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


பிரதமர் வருவதற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முறையான நேரத்தில் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருவார் என கூறப்படுகிறது.