புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: ஞாயிறு, 10 மார்ச் 2019 (17:28 IST)

மோடி ‌கேடிகளுக்கு தான் டாடி: கருணாஸ் கடும் விமர்சனம்

மோடி ‌கேடிகளுக்கு தான் டாடி,   அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் கடுமையாக பதில் அளித்துள்ளார்.
 
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் எம்எல்ஏவுமான கருணாஸ் அண்மைக்காலமாக மத்திய ஆளும் பாஜக  அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
 
இன்று திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அவர் கூறுகையில்,
 
மோடி ‌கேடிகளுக்கு தான் டாடி,  கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செய்யவில்லை, தமிழகத்தை வஞ்சித்து  வருகிறது, எனக்கு எந்த கட்சியும் குறை சொல்லும் நோக்கம் இல்லை. 

பாஜக. ஆட்சியில் தமிழகம் முழுக்க முழுக்க  புறக்கணிக்கப்பட்டுள்ளது, கேரளாவின் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

இதனால் பிரதமர் மீது இந்திய குடிமகனாக எனக்கு வருத்தம் உள்ளது. இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதனுடைய பிரதீபலானது நிச்சயமாக இந்த தேர்தலில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.