வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (16:03 IST)

மோடி ஒரு பிக்பாக்கெட், எடப்பாடி அவரின் கூட்டாளி: சீத்தாராம் யெச்சூரி கடும் தாக்கு

கோவை சிவானந்தாகாலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'கோவை மண்டல மக்கள் கோரிக்கை மாநாடு' நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கோவை மாநகரம் ஒரு காலத்தில்  மோட்டார் பம்புகள் தயாரிக்கும் முதன்மையான நகரமாகும். ஆனால்,இப்போது அப்படி இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளது. 
 
ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு, நாட்டின் ஜிடிபி குறைந்துவிட்டது. 5 லட்சம் பேர் தொழில் மற்றும் வேலை இழந்துவிட்டனர். இதற்கு மத்திய அரசே முக்கிய காரணம். மத்தியில் உள்ள மோடி ஆட்சியும் மாநிலத்தில் உள்ள எடப்பாடி ஆட்சியையும் தூக்கி எறிய வேண்டும். 
 
நாட்டின் பாதுகாவலன் என்று தூங்கி கொண்டிருக்கும் மோடியை, நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மோடி ஒரு பிக்பாக்கெட். அவரது கூட்டாளியாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என  சீத்தாராம் யெச்சூரி கடுமையாக பேசினார்.