செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (10:47 IST)

பாஜகவில் இணைந்தது ஏன்? ம.நீ.ம அருணாச்சலம் விளக்கம்!

பாஜகவில் இணைந்தது ஏன்? ம.நீ.ம அருணாச்சலம் விளக்கம்!
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சல பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் 
 
இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து அருணாச்சலம் கூறியபொழுது  மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் கமலிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அதற்கு கமல் மறுத்துவிட்டதாகவும் விவசாயிகளுக்கு விரோதமான போராட்டத்தில் அவர் கலந்து கொண்டதாகவும் அதனால் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவின் தொண்டனாக என்னை இணைத்துக் கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பில் இருந்த அருணாச்சலம் திடீரென விலகி பாஜகவில் இணைந்து உள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது