வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (11:51 IST)

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி!

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுத்த 18 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


 
 
கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். என கூறியிருந்தார். இதற்கு காரணம் இந்த எம்எல்ஏக்கள் 18 பேரும் முதல்வருக்கான ஆதரவை தான் வாபஸ் பெற்றார்களே தவிர கட்சியி, இருந்து விலகவில்லை.
 
தற்போது தமிழக அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. அதற்கும் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை தள்ளுபடி செய்துள்ளது.
 
இதே போன்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதன் மறு விசாரணை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தேவையில்லாத ஒன்று. மேலும் இந்த வழக்கில் பொதுநலம் எதுவும் இல்லை எனவே இதனை தள்ளுபடி செய்தவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.